ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திரளாக இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அங்கு அதிமுகவினரை ஈர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உழவர் உழைப்பாளர் கட்சியின் மகுடேஸ்வரன் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களை வரவேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் தேர்தல் பணிகளில் தொண்டர்கள் அனைவரும் முழுவீச்சில் களமிறங்கி பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
