தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் திமுகவை வழக்கம் போல கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் முதிர்ச்சியற்ற நிலையில் உள்ள ‘பால்வாடி’ கட்சிக்கு, பவளவிழா காணும் பாரம்பரியமிக்க திமுக பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார். மேலும், தவெக என்பது வெறும் ஊருக்கு ஊர் சென்று கூட்டம் நடத்தும் ஒரு தற்காலிகக் கட்சி என்றும், ஆனால் திமுக என்பது மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி, ஊர் முழுவதும் செல்வாக்குடன் திகழும் பேரியக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரும் தேர்தலில் திமுக அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.