எக்ஸ் (X) வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “வரப்போகும் தேர்தலில் நான் விஜய்க்கு தான் ஓட்டுப் போடுவேன், என் குடும்பத்தில் இருக்கும் 9 பேரும் அவருக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும்” என்று மிகத் தீவிரமாகக் கூறினார்.

அத்தோடு நிறுத்தாமல், “என் பேச்சைக் கேட்காமல் குடும்பத்தில் இருப்பவர்கள் ஓட்டுப் போடவில்லை என்றால், அவர்களுக்குச் சோற்றில் விஷம் வைத்துவிடுவேன்” என்று அவர் மிரட்டல் தொனியில் பேசியது அனைவரையும் உறைந்து போகச் செய்துள்ளது. ஒரு அரசியல் தலைவரின் மீதான ஈர்ப்பு இவ்வளவு தீவிரமான வன்முறை எண்ணத்தைத் தூண்டுமா எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் பேட்டி வைரலானதைத் தொடர்ந்து, “இது ஆரோக்கியமான அரசியலா?” என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.