ஈரோடு தவெக பொதுக்கூட்ட மைதானத்தில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடிகள் அடங்கிய ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து செல்ல முடியாமல் பெண் ஒருவர் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். வெயிலில் அந்தப் பெண் தடுமாறியதைக் கண்ட அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாக ஓடிச் சென்று அந்தப் பெண்ணுக்கு உதவினார்.
A woman who was struggling to carry the bag containing TVK flags brought for sale.The police officer who immediately ran and helped.. ❤️
Huge Respect for you, sir ❤️🥹@TVKVijayHQ
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) December 18, 2025
அதிகாரத் தோரணை ஏதுமின்றி, அந்தப் பெண் சுமந்த பாரத்தைத் தன் கைகளில் வாங்கி அவருக்கு உதவிய அந்த மனிதநேயமிக்க செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தக் காட்சி காணொளியாக வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “சீருடைக்கு பின்னால் ஒரு ஈரமான மனசு இருக்கு” என்று நெட்டிசன்கள் அந்தப் போலீஸ் அதிகாரியை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
