இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளியில், ஒரு பெண் தன் வீட்டுக்குள் இருக்கும் நபர் நீண்ட நேரமாகக் கதவைத் திறக்கவில்லை என்றும், அவர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் பயந்து போய் தீயணைப்புத் துறையினரை உதவிக்கு அழைக்கிறார். உயிருக்கு ஏதோ ஆபத்து என்று பதறிப்போய் வந்த தீயணைப்பு வீரர்கள், பெரும் போராட்டத்திற்குப் பிறகு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.
ஆனால், உள்ளே சென்றவர்களுக்குக் காத்திருந்தது ஒரு பெரிய ட்விஸ்ட்! உள்ளே இருந்த நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு, உலகம் தெரியாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். இவ்வளவு பெரிய ரகளையே அவர் தூக்கத்தைக் கலைக்கவில்லை என்பதுதான் ஹைலைட். சீரியஸாகத் தொடங்கி காமெடியாக முடிந்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
