தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஈரோட்டில் குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலையும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தம்பதி ஒருவர் தங்களது ஒன்பது மாத கைக்குழந்தையையும், நான்கு வயது மகனையும் அழைத்து வந்துள்ளனர். பல மணி நேரம் வெயிலில் குழந்தைகளுடன் அவர்கள் காத்திருந்த இந்தக் காட்சி அங்கிருந்தவர்களைப் பதற்றமடையச் செய்தது.
Height of stupidity 😡pic.twitter.com/tFilRhyVmp
— Dr M K SHARMILA (@DrSharmila15) December 18, 2025
இது தொடர்பான காணொளியை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், “இதுதான் முட்டாள் தனத்தின் உச்சம்” என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இது ‘பாசமா அல்லது அறியாமையா?’ என நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
