அடர்ந்த வனப்பகுதியில் ஆற்றின் கரையில் தாகம் தணிக்கத் தண்ணீர் குடிக்கச் சென்ற ஒரு புலியை, தண்ணீருக்குள் மறைந்திருந்த முதலை திடீரெனத் தாக்கிய பரபரப்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீரின் ராஜா எனக் கருதப்படும் முதலை, புலி தண்ணீர் குடிப்பதைச் சமயம் பார்த்துக் காத்திருந்து மின்னல் வேகத்தில் தாக்கியது.

 

அந்த நொடியில் எவ்விதப் பதற்றமும் அடையாத புலி, நிலப்பகுதிக்கே உரிய தனது அபாரமான வேகத்தையும் சுறுசுறுப்பையும் பயன்படுத்தி முதலையின் கொடியப் பிடியிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பியது. வலிமைக்குச் சற்றும் சளைக்காத வேகம் இருந்தால் மட்டுமே காட்டில் உயிர் பிழைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்தக் காட்சி, பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

குமான் ஜாக்ரன் என்ற சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், காட்டில் வெறும் பலம் மட்டுமே வெற்றியைத் தராது, சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளே உயிரைக் காக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.