மிகப்பெரிய வெற்றிப் படமான ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் கீர்த்தன் நடகவுடா. இவருடைய நான்கு வயது மகன், சிரஞ்சீவி சோனார்ஷ், எதிர்பாராத விதமாக ஒரு லிஃப்ட் விபத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மிகக் குறுகிய நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து, கீர்த்தன் மற்றும் அவரது மனைவி சம்ருதி படேல் குடும்பத்தினரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இதயத்தை நொறுக்கும் செய்தியைக் கேட்டு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் கீர்த்தனின் குடும்பத்திற்குத் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், சமூக வலைதளம் வாயிலாகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த இக்கட்டான நேரத்தில் அந்தக் குடும்பத்திற்குத் தேவையான மனவலிமை கிடைக்கப் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். கீர்த்தன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்தடுத்த முக்கியத் திரைப்படங்களிலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.