சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, த.வெ.க. அரசு மற்றும் அதன் அமைச்சர்களுக்கு எதிராக மிகக் கடுமையான அரசியல் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், “நீங்கள் எதை வேணாலும் பண்ணுங்க, ஆனால் தி.மு.க.வின் ஒரு தொண்டனைக்கூட உங்களால் அசைக்க முடியாது; தமிழ்நாட்டில் என்றைக்கும் கருப்பு சிவப்பு கொடிதான் பறக்கும்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

மேலும், புதிய த.வெ.க. அரசை “ரீல்ஸ் அரசு” என்றும், தி.மு.க. திட்டங்களுக்குத் தங்களின் விளம்பரங்களை ஒட்டும் “ஸ்டிக்கர் அரசு” என்றும் மிகக் காட்டமாகச் சாடினார். த.வெ.க.வினர் வெறும் மைக் முன்னால் பேசுவதையும் சோசியல் மீடியா அரசியல் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய மேயர் பிரியா, “முதலில் உங்கள் எம்.எல்.ஏ.க்களை இரண்டு, மூன்று மணி நேரம் வெயிலில் நின்று இன்ஸ்பெக்ஷன் செய்து கலப்பணி ஆற்றச் சொல்லுங்கள்;

அதை விடுத்து விர்ச்சுவல் வாரியர்ஸை வைத்துத் தாக்குவதால் எந்தப் பயனும் இல்லை” என்றார். இறுதியாக, முதல்வர் விஜய்யின் மேடைப் பேச்சுகளை விமர்சித்த அவர், “வீட்டில் இருந்து எழுதி எடுத்து வரும் ஸ்கிரிப்ட்டைக் காரில் வரும்போதாவது ஐந்து முறை படித்துப் பார்த்திருக்கலாம்; இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை மறந்து போய் பேப்பரை எடுத்துப் பார்க்கிறார்”

என்று சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய புதிய ஆட்சியாளர்களை “அரசியல் நாகரிகம் தெரியாத தற்குறி கூட்டங்கள்” என்றும் அதிரடியாக விமரிசித்துள்ளார்.