இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச பிரபலமான விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் நாளை மாலை 6:30 மணி அளவில் வெளி வருகிறது. இதனை முன்னிட்டு தற்போது பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.