டெல்லியின் பஹாரகஞ்ச் பகுதியில், ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் டாக்ஸி ஓட்டுநரைத் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் டிசம்பர் 14 அன்று நிகழ்ந்துள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், ட்ராஃபிக் போலீஸ் அதிகாரி ஒருவர் டாக்ஸி ஓட்டுநரின் வாகனத்துக்குள் நுழைந்து, அவரைப் பலமாகத் தாக்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

டாக்ஸி ஓட்டுநர் தனக்குக் காயம் ஏற்பட்டதால் வலி தாங்காமல் கத்திக் கொண்டிருக்கிறார். ஒரு அரசு ஊழியரான காவல்துறை அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறி ஒரு டாக்ஸி ஓட்டுநரை இவ்வாறுத் தாக்கிய சம்பவம், காவல்துறையின் நடத்தை குறித்துப் பலத்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது.