ஹைதராபாத்தில் ஒரு குடும்பப் பிரச்சினைக் காரணமாக, மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி, தனது 8 வயது மகளை ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்துத் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான அந்தப் பெண், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்டத் தொடர்ச்சியான சண்டைகள் காரணமாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை மதியம் அந்தப் பெண் தனது மகளை 4-வது மாடிக்கு அழைத்துச் சென்று, தூக்கி வீசியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டாகப் பதிவு செய்யப்பட்டு, மாலகாஜ்கிரி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
