நிழற்படங்கள் அல்லது ஆபாசப் படங்களைப் பார்ப்பது உங்களைச் சட்டச் சிக்கலில் சிக்கவைக்கும் எனப் பயமுறுத்தி, சிபிஐ அதிகாரிகள் போல வேடமிட்டு மோசடி கும்பல் புதிய வகை மின்அஞ்சல் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோசடியில், மத்திய புலனாய்வுப் பிரிவின் பெயரில் போலியான நோட்டீஸ்களை அனுப்பும் குற்றவாளிகள், சம்பந்தப்பட்ட நபர் ஆபாச இணையதளங்களைப் பார்த்தது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்க அல்லது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க பெரும் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர். இந்த மோசடியின் முக்கிய நோக்கம் பயத்தை உண்டாக்கி மக்களிடம் இருந்து பணம் பறிப்பதே ஆகும். சிபிஐ போன்ற அரசு நிறுவனங்கள் ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் இதுபோன்ற அபராதங்களைக் கோருவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Aakash Amod Rajput | Web Developer (@aakash.a.dev)

“>

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்யாமலும், எந்தத் தொகையையும் செலுத்தாமலும் இருப்பது அவசியம். இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.