சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், தனது தம்பியின் உயிரைக் காப்பாற்ற அண்ணன் காட்டிய அபாரத் துணிச்சல் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. டிசம்பர் 11, 2025 அன்று பதிவான இந்த சிசிடிவி காட்சிகளில், இரு சிறுவர்கள் தங்கள் வீட்டின் அருகே உள்ள ஒரு மலைப்பாதையை ஒட்டிய தோட்டத்தில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக தம்பி தனது சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு ஆழமான பள்ளத்தை நோக்கிச் சரிந்து விழுந்துள்ளார். தன் தம்பி உயிருக்காகப் போராடுவதைக் கண்ட அந்த அண்ணன், ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பள்ளத்திற்குள் குதித்து தம்பியைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
Brothers Love 💪💪💪 pic.twitter.com/pauCZAfgKN
— SriSathya (@sathyashrii) December 13, 2025
“>
இந்நிலையில் இக்கட்டானச் சூழலில் கூட அந்தச் சிறுவன் காட்டிய சமயோசித புத்தியும், தம்பியின் மீதான மாறாத பாசமும் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, “அண்ணன் எப்போதுமே ஒரு தம்பிக்குக் காவல் தெய்வமாகத் திகழ்வார்” என்பதற்கு இதுவே சிறந்த சாட்சி என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
