உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகமாகக் கருதப்படும் ‘கலிபோர்னியம்’ பற்றிய வியக்கத்தக்க தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த செயற்கை கதிரியக்க தனிமத்தின் ஒரு கிராம் விலை சுமார் 27 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 245 கோடி ரூபாய்) ஆகும். இந்த மலைக்க வைக்கும் தொகையைக் கொண்டு சுமார் 200 கிலோ தங்கத்தை எளிதாக வாங்கிவிடலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி போன்றவை இயற்கையாகவே சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன, ஆனால் கலிபோர்னியம் பூமியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இது 1950-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகளால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

கலிபோர்னியத்தின் விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு அதன் கடினமான உற்பத்தி முறையே முக்கிய காரணமாகும். அணு உலைகளுக்குள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த அளவிலேயே இது தயாரிக்கப்படுகிறது. விலை உயர்ந்ததாக இருந்தாலும், இது அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, அணு உலைகளைத் தொடங்குவதற்கும், புற்றுநோய் சிகிச்சையில் நியூட்ரான் கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இதனைத் தயாரிக்கும் திறன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.