காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் ‘யங் இந்தியா’ (Young Indian) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தனர். 2012 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நிதி நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில், சுமார் 988 கோடி ரூபாய் அளவுக்குப் பண மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை புகார் கூறியது. ‘நேஷனல் ஹெரால்டு’ பண மோசடி வழக்கு என அறியப்பட்ட இந்தப் புகாரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. தற்போது, அமலாக்கத்துறை கொடுத்த இந்தப் புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
