சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, நிறவெறி (Colourism) மற்றும் பள்ளி மிரட்டல் (Bullying) ஆகியவற்றின் தாக்கத்தை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. அதில், 5 வயதுச் சிறுமி ஒருவர் தனது தாயிடம் கதறி அழுதுகொண்டே, “என் தோல் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லோரும் அது அசிங்கமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று கூறுகிறார்.
தாயார், “உன் தோல் அழகானது, எல்லோரும் வித்தியாசமானவர்கள்” என்று அரவணைத்துத் தேற்றியபோதும், தனக்கு வெளிர் நிற தோல் வேண்டும் என்றுச் சிறுமி பேசியது காண்பவர்களின் இதயத்தை உடைத்துள்ளது.
தனது மகள், கருப்பாக இருப்பதால், தன்னால் ஒருபோதும் ‘இளவரசியாக’ (Princess) இருக்க முடியாது என்று நம்புவதாக அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை முதலில் பள்ளி நிர்வாகத்திடம் காண்பிப்பதற்காகவே தாயார் வீடியோ பதிவு செய்துள்ளார். ஆனால், ஆசிரியர்கள் உறுதியளித்தப் பிறகும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்தக் குடும்பம் வேறு பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சிறுமியைப் மனரீதியாகத் தாக்கியவர்கள் மீது கடும் கோபத்தையும், சிறுமிக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
