உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், பயனர்களுக்கு புதுப்புதுக் அப்டேட்களை அறிமுகம் செய்ய தொடர்ந்து முயற்சி செய்கிறது. துவக்கத்தில் குறுஞ்செய்திகளை மட்டும் அனுப்பும் செயலியாக இருந்த வாட்ஸ் அப், பின்னர் ஆடியோ, வீடியோ கால் வசதி, பாடல்களை ஸ்டேட்டஸ் ஆகப் பகிரும் வசதி போன்ற பல அப்டேட்களை கடந்த ஆண்டுகளில் அறிமுகம் செய்தது. சந்தை போட்டியையும், பயனர்களை ஈர்க்கவும் தொடர்ந்து இத்தகைய புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையில், தற்போது பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு அப்டேட் வந்துள்ளது. புதிய வசதி மூலம் வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியேறும் போது, குழுவில் உள்ள பிறருக்கு தெரியாமல் வெளியேறலாம். இதுவரை குழுவிலிருந்து யாராவது வெளியேறினால், அந்த உறுப்பினர் யார் என்பதைக் குழுவில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள முடியாதவாறு உள்ளது.

மேலும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த இந்த வசதி, பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.