நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் செய்திகளை நேரடியாக மக்கள், குறிப்பாகக் கிராமப்புற மக்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் புதிய தொலைக்காட்சியைத் தொடங்குகிறார். ‘வெற்றித் தொலைக்காட்சி’ என்ற பெயரில் தொடங்கப்படவிருக்கும் இந்த நிறுவனத்திற்கு, கட்சியின் செயலாளரான ஆதவ் அர்ஜுனா நிதி வழங்குகிறார்.
2026 தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதே மத்திய அரசிடம் அனுமதி பெறும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், தொலைக்காட்சியை நடத்தத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. விரைவில், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
