தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய போலிஸ் அனுமதி அளித்துள்ளது. ஈரோடு அருகே பெருந்துறை விஜயமங்கலத்தில் பிரச்சாரம் நடத்த நிபந்தனைகளுடன் கூடிய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்பதால், த.வெ.க. தரப்பில் ₹50,000 கட்டணமும், ₹50,000 டெபாசிட்டும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் நடத்தலாம் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது.
