​அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்ற கே.கே. செல்வம் மீண்டும் கட்சிக்குத் திரும்பிய நிலையில், அவர் தனது சித்தப்பாவும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இருக்கும் முக்கிய நிர்வாகியுமான செங்கோட்டையனுக்கு எதிராக ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செங்கோட்டையன் பலரிடம் இருந்து பணம் வாங்கியதாகவும், ஆனால் இதுவரை அதைக் கொடுக்கவில்லை என்றும் கே.கே. செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, செங்கோட்டையன் யாரிடமெல்லாம் கடன் வாங்கியுள்ளார் என்ற பட்டியலைச் சில நாட்களில் வெளியிடப்போவதாகவும் கே.கே. செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையனைத் தோற்கடிப்பேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்த ஒருவர் த.வெ.க. நிர்வாகி மீது இப்படிப் புகார் கூறியிருப்பது, இரண்டு கட்சிகளின் அரசியல் வட்டாரத்திலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.