கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியைக் காதலித்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்தச் சிறுவனைக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பின்னரும் அந்தச் சிறுவன் மீண்டும் சிறுமியுடன் தொடர்ந்து கைபேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினரான செல்லத்துரை உட்பட இரண்டு பேர், அந்தச் சிறுவனைத் தாக்கியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட அந்தச் சிறுவனின் தம்பியான எட்டாம் வகுப்பு மாணவன், ஓசூர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.
தள்ளு வண்டியில் வியாபாரம் செய்கிறவரிடம் தகராறு
சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் அவரை அடித்து துன்புறுத்தியவனுக்கு சரியான பாடம் கற்பித்தார்ஏதோ ஒரு சிறிய முதலீட்டை போட்டு கடையை நடத்தி கோடி கோடியாக சம்பாதித்து விடவா போகிறார் அவரிடம்
ரவுடிதனம் காட்டிய நாய்க்கு சரியான பாடம் ….. pic.twitter.com/uRjEOa0btP— ethisundar 🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) December 12, 2025
அவர், செல்லத்துரை நடத்தி வரும் சாலையோர இனிப்புக் கடைக்கு சென்று, தனது அண்ணனை ஏன் அடித்தீர்கள் என்று செல்லத்துரையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை, கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை அந்த எட்டாம் வகுப்பு மாணவன் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் மாணவனுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த அந்த மாணவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓசூர் காவல்துறையினர், செல்லத்துரை உட்பட 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
தகராறு ஏற்பட்டபோது பள்ளி மாணவன் மீது இனிப்புக் கடைக்காரர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றும் காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
