தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை மையப்படுத்தியது.
அதே கிராமத்தைச் சேர்ந்த 52 வயது பிச்சைமணி என்பவர், ஆசை வார்தை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் உறவு வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த உறவால் சிறுமி கர்ப்பமான நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். தாயார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் கர்ப்பம் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், முதியவரும் சிறுமியும் தனிமையில் இருந்த காட்சியை மொபைலில் ரகசியமாக படம் பிடித்து வைத்திருந்தான்.
பிறகு “இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் போட்டுவிடுவேன்” என மிரட்டி, சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சிறுமி நடந்ததை தாயிடம் முழுமையாகச் சொன்னதும், ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வழக்கு பதிந்து, 52 வயது பிச்சைமணி மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
