தங்கள் கட்சி பெண் எம்.எல்.ஏ பல்லவி மீதான திமுகவினரின் அநாகரீக தாக்குதலுக்கு தவெகவினர் ஆவேசமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியாக இருக்கலாம், அதற்காக ஒரு பெண்ணின் தாய்மையையும் பெண்மையையும் இவ்வளவு கேவலமாக விமர்சிப்பதா என்றும், தேர்தல் தோல்வி பயத்தில்தான் திமுக உடன்பிறப்புகள் மதியிழந்து இப்படிப் புலம்புகிறார்கள் என்றும் தவெகவினர் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளனர்.
தன் கைக்குழந்தையுடன் பொது நிகழ்ச்சிக்கு வருவது பல்லவியின் தனிப்பட்ட உரிமை என்று நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். நிஜமான அக்கறையோடு அறிவுரை கூறுபவர்களை மதிக்கிறோம், ஆனால் தாய்மையைச் சிறுமைப்படுத்தும் திமுகவின் மிருகத்தனமான, இரக்கமற்ற முகமூடி இந்த விவகாரத்தின் மூலம் மொத்தமாகக் கிழிந்திருக்கிறது என இணையத்தில் நெட்டிசன்கள் பயங்கரமாகக் கொந்தளித்து வருகின்றனர்.
