அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ஊழியர்களின் கழிவறை நேரத்தைக்கூட நிர்வாகம் கண்காணித்து வரும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், தான் கழிவறையில் 53 நிமிடங்கள் இருந்ததற்காக, நிறுவனத்தின் மேலாளர் தன்னிடம் விளக்கம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகக் குமுறியுள்ளார்.
மேலும் அந்த நிறுவனத்தின் விதிகளின்படி ஊழியர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 நிமிடங்கள் மட்டுமே கழிவறை இடைவேளை எடுக்க அனுமதி உண்டு. இந்த வரம்பை மீறியதால், கழிவறையில் செலவிட்ட கூடுதல் நேரத்தை ஈடுகட்ட, அலுவலகம் முடிந்த பிறகு மேலும் 40 நிமிடங்கள் கூடுதலாகத் தங்கி வேலை செய்ய வேண்டும் என்று மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களாக அந்த நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தனக்கு, இதுவரை எந்த ஒரு புகாரும் வந்ததில்லை என்றும், தற்போதைய இந்த நடவடிக்கை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அந்த ஊழியர் ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் தான் கழிவறைக்குச் செல்லும்போது தனது மொபைல் போனைக்கூட மேசையிலேயே வைத்துவிட்டுத்தான் செல்வதாகவும், நேரத்தை வீணடிப்பதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வேலையின் தரத்தில் எந்தக் குறையும் இல்லாதபோதும், ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட இப்படி நுணுக்கமாகக் கண்காணிப்பது அநியாயமானது என்று இணையவாசிகள் பலரும் அந்த நிறுவ
