பல்லவியின் கைக்குழந்தை விவகாரத்தில் திமுகவினர் செய்த விமர்சனத்திற்கு, நேரடியாக அவர்களின் வாரிசு அரசியலை இழுத்து தவெக ஐடி விங் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளது. பிறந்து சில வாரங்களே ஆன குழந்தையைத் தூக்கிக்கொண்டு பொது நிகழ்ச்சிக்கு வருவதைக் கேலி செய்யும் திமுக உடன்பிறப்புகளே, பிறந்து 48 வருடங்கள் ஆகியும் உங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்னும் தன் மகனைத் தூக்கிச் சுமந்துகொண்டு திரிகிறாரே, அதைப்பற்றிப் பேச உங்களுக்கு வாய் இல்லையா என்று தவெகவினர் மிகக் காரசாரமாகக் கேட்டு வெளுத்து வாங்கியுள்ளனர்.
காலங்காலமாகக் கட்சிக்கு உழைத்த மூத்த தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்களின் முதுகில் ஏறி, தன் மகனைத் துணை முதலமைச்சராக்கி, இப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆக்கியுள்ளாரே, திமுக ஒரு குடும்பச் சொத்து என்பதை மீண்டும் நிரூபித்துள்ள ஸ்டாலினைப் பற்றிப் பேச உங்களுக்குத் தைரியம் இருக்கா என்றும் தவெகவினர் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். உதயநிதி ஸ்டாலினை நேரடியாகக் குறிவைத்துத் தவெகவினர் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், இணையத்தில் பெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.
