தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்த வேல்குமார் (27) என்றக் கூலித் தொழிலாளி, கள்ளக்காதலைத் தட்டிக் கேட்டதால், சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த உடன்குடி தேரியூரைச் சேர்ந்த புனிதராஜ் (23) மற்றும் அவரது அண்ணன் நாகராஜ் இருவரும் வேல்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த வேல்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை உயிரிழந்தார். விசாரணையில், திருமணமானப் பெண்ணுடன் புனிதராஜ் பழகி வந்ததை வேல்குமார் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள புனிதராஜ் மற்றும் அவரது அண்ணன் நாகராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.