நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின்  ஈரோடு நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், வாரி மஹால் அருகே பரப்புரைக்காக தாங்கள் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும், காவல்துறை அதிகாரிகளோ இதுவரை அனுமதி மறுப்புக் கடிதம் எதுவும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டோல் கேட் அருகில் உள்ள மாற்று இடத்திற்குக் கேட்டு அனுமதி கடிதம் வழங்க இருப்பதாகவும், விஜய்யின் வருகை ஈரோட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.