தவெக காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுக்கள் நிலவி வருகின்றன.
இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் நடிகர் விஜய்யைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. இந்தச் சந்திப்பு குறித்த கேள்விக்கு, பிரவீன் சக்கரவர்த்தி “அது உண்மைதான்” என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் உடனான சந்திப்பின் நோக்கம் குறித்துப் பிரவீன் சக்கரவர்த்தி மேலும் கூறுகையில், “இருவரும் தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தோம். இது தவிர தற்போது வேறு எதுவும் கூற முடியாது” என்று தெரிவித்தார். கூட்டணியின் பேச்சுவார்த்தை குறித்து அவர் நேரடியாக எதையும் குறிப்பிடாமல் ரகசியம் காத்துள்ளார். ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் விஜய்யைச் சந்தித்தது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
