சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை மீதான தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொய் சொல்வதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பான 144 தடை உத்தரவு குறித்து, நீதிமன்றத்தில் அசல் கோப்புகளைத் தராமல், திருத்தப்பட்ட கோப்புகளை அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 2014-ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ‘மலை உச்சியில் தீபம் ஏற்றுவது’ தொடர்பானது என்றும், தற்போதுள்ள கோரிக்கை ‘மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது’ தொடர்பானது என்றும் அண்ணாமலை விளக்கினார்.
திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கும், கோயிலுக்கும் சொந்தமானது என்றும், தீபத்தூண் கோயிலுக்குச் சொந்தமானது என முந்தைய தீர்ப்புகள் உறுதி செய்துள்ள நிலையில், திமுக அரசு சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலில் ஈடுபட்டு, நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, மத மோதலைத் தூண்டும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் சாடினார்.
