ஒரு காலத்தில் வீடுகளில் கொசுவர்த்திச் சுருள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சந்தையில் பலவிதமான கொசு விரட்டிகள் வந்துவிட்டதால், இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால், கொசுவர்த்திச் சுருளைக் கொதிக்கும் நீரில் போட்டால் என்ன ஆகும் என்று என்றாவது யோசித்ததுண்டா? சமூக ஊடகங்களில் தற்போது அப்படியான ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது. ஒரு நபர் கொதிக்கும் நீரில் கொசுவர்த்திச் சுருளைப் போட்டு, அதை அபாயகரமான ஒரு பொருளாக மாற்றியுள்ளார்.

இதைப் பார்த்த பலர் கேலி செய்தாலும், சிலர் கோபமடைந்துள்ளனர். இந்த வீடியோவில், அந்த நபர் கொசுவர்த்திச் சுருள் முழுவதுமாக நீரில் கரையும் வரை கொதிக்க வைக்கிறார். பின்னர், அதில் கிராம்பு மற்றும் சர்க்கரை சேர்க்கிறார். பின்பு, அந்த நீரை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழிக்கும் ஒரு திரவத்தையும், கூடவே எண்ணெய் போன்ற வேறொரு பொருளையும் சேர்க்கிறார்.

இப்படித் தயாரிக்கப்பட்ட இந்த விசித்திரமான திரவம், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூச்சிகளைக் கொல்வதில் அதிக திறன் கொண்டது என்று அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த வினோதப் பொருள் எதற்காக உருவாக்கப்பட்டது என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

“>

 

இந்த வீடியோவை ‘X’ தளத்தில் (@_fitnesshub) பகிரப்பட்டு, ‘கொசுவர்த்திச் சுருளைக் கொதிக்கும் நீரில் போடுங்கள், முடிவுகளைப் பார்த்து வியந்து போவீர்கள்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த 2 நிமிடம் 38 வினாடி வீடியோவை இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘இந்த வீடியோ என் நேரத்தை வீணாக்கிவிட்டது’, ‘இதை வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம்’ என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒரு நகைச்சுவையான பயனர், ‘இந்த சூப்பைக் குடித்தால், மீண்டும் கொசு உங்களைக் கடிக்காது’ என்றும், மற்றொருவர் ‘இது கொசுக்களைக் கொல்லவா அல்லது மனிதர்களைக் கொல்லவா?’ என்றும் கேட்டுள்ளார்.