இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 முதல் பிப்ரவரி 5 வரை நவிமும்பை மற்றும் வதோதராவில் நடைபெற உள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் (WPL) டி20 கிரிக்கெட் தொடர் முன்னிட்டு, வீராங்கனைகள் ஏலம்    டெல்லியில் நடைபெற்றது.

மொத்தம் 277 வீராங்கனைகள்—194 இந்தியர்கள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள்—ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளைத் தேர்வு செய்தன.

சமீபத்தில் நடந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர்நாயகி விருது பெற்ற தீப்தி ஷர்மாவை வாங்க கடும் போட்டி நிலவியது. ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் இருந்த அவரை, உ.பி. வாரியர்ஸ் அணி RTM கார்டைப் பயன்படுத்தி ரூ.3.20 கோடிக்கு பெற்றது. மொத்தம் 67 வீராங்கனைகள் ரூ.40.80 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

மேலும் அடுத்த வருடம் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை போட்டி நடைபெற இருப்பதாக பிசிசிஐ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 22 போட்டிகளில் நவி மும்பை டிஒய் பாட்டில் மற்றும் வதேரா மைதானங்களில் சுமார் 11 போட்டிகள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அணியில் இடம்பெறுள்ள வீராங்கனைகள் விவரங்களை பார்க்கலாம். அதன்படி,

மும்பை இந்தியன்ஸ்

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஜி. கமிலினி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், ரஹிலா பிர்தஸ், மில்லி இல்லிங்வொர்த், அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், சமஸ்கிருதி குப்தா, எஸ். சஜனா, திரிவேணி வசிஸ்தா, நிக்கோலா கேரி, பூனம் கெம்னார், நல்லா ரெட்டி.

டெல்லி கேப்பிடல்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, லிசெல்லே லீ, நந்தினி ஷர்மா, லாரா வோல்வார்ட், மரிசானே கப், தனியா பாட்டியா, தீயா யாதவ், அன்னாபெல் சதர்லேண்ட், மம்தா மடிவாலா, நிகி பிரசாத், சினெல்லே ஹென்றி, சினே ராணா, மின்னு மணி, லூசி ஹாமில்டன், ஸ்ரீ சரணி.

குஜராத் ஜெயண்ட்ஸ்

டேனி வியாட்-ஹாட்ஜ், ஆஷ் கார்ட்னர், பெத் மூனி, ரேணுகா தாகூர், ராஜேஸ்வரி கயக்வாட், பார்தி புல்மாலி, சோபி டெவின், யாஸ்திகா பாட்டியா, டைட்டாஸ் சாது, ஜார்ஜியா வேர்ஹாம், ஷிவானி சிங், ஹேப்பி குமாரி, கிம் கார்த், காஷ்வீ கௌதம், தனுஜா கன்வர், கனிகா அஹுஜா, அனுஷ்கா சர்மா, ஆயுஷி சோனி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், லாரன் பெல், லின்சே ஸ்மித், ஜார்ஜியா வோல், ஸ்ரேயங்கா பாட்டீல், பிரத்யோஷா குமார், பிரேமா ராவத், கிரேஸ் கேரிஸ், நாடின் டி கிளார்க், பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, டி. ஹேமலதா, கௌதமி நாயக்.

உ.பி. வாரியர்ஸ்

ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி ஷர்மா, ஷிப்ரா கிரி, கிராந்தி கவுட், ஆஷா சோபனா, மெக் லானிங், தியன்ட்ரா டோட்டின், தாரா நோரிஸ், சோபி எக்லெஸ்டோன், போப் லிட்ச்பீல்ட், சோலி டிரையான், கிரண் நவ்கிரே, ஷிகா பாண்டே, சிம்ரன் ஷேக், ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், ஜி. த்ரிஷா, சுமன் மீனா. தேசிய-சர்வதேச நட்சத்திரங்கள் இணைந்து பங்கேற்கும் இந்த ஆண்டு WPL ஏலம், வரவிருக்கும் தொடருக்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.