உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் ஒரு வேடிக்கையான மற்றும் அசாதாரணமான சம்பவம் நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு மூதாட்டி இறந்ததைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையைப் பிடிப்பதற்காக ஒரு கூண்டினை வைத்திருந்தனர். அந்தக் கூண்டின் உள்ளே, சிறுத்தையை ஈர்க்கும் விதமாக ஒரு ஆட்டுக் குட்டியையும் கட்டி வைத்திருந்தனர்.
வியாழக்கிழமை இரவு, அந்த ஊரைச் சேர்ந்த பிரதீப் என்ற நபர், கூண்டில் சிறுத்தை சிக்கியிருக்கிறதா என்று பார்ப்பதற்காகக் கூண்டின் உள்ளே சென்றார். எதிர்பாராதவிதமாக, அவர் உள்ளே சென்றதும் கூண்டு தானாகவே பூட்டிக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் கூண்டைத் திறக்க முடியாததால், அவர் தனது மொபைல் போன் மூலம் கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்தார்.
बहराइच में तेंदुए को पकड़ने के लिए लगाए गए पिंजड़े में बीती देर रात एक आदमी क़ैद हो गया, जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है.#Bahraich #UttarPradesh #Viral pic.twitter.com/SunbWhzZqJ
— NDTV India (@ndtvindia) November 28, 2025
கிராம மக்கள் தகவல் கொடுத்ததன் பேரில், வனத்துறையினரும் போலீஸாரும் வந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவரைக் கூண்டிலிருந்து விடுவித்தனர். இது குறித்துப் பேசிய வன அதிகாரி, பிரதீப் கூண்டுக்குள் சென்றதால் சிக்கிக் கொண்டார், உடனடியாக மீட்புக் குழுவை அனுப்பி அவரை வெளியே கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
