திருவனந்தபுரம் வாஞ்சியூரைச் சேர்ந்த 28 வயதான ஹ்ரித்விக் என்பவர், தனது தந்தையிடம் ஆடம்பரக் கார் கேட்டு சண்டையிட்டபோது, தந்தை அடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அக்டோபர் 9 அன்று, ஏற்கனவே விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தும், ஹ்ரித்விக் திருப்தியடையாமல் ஆடம்பரக் காரை வாங்க வற்புறுத்தி உள்ளார்.
இதனால் வீட்டில் ஏற்பட்ட சண்டையில், மகன் தந்தையைத் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த தந்தை, இரும்புக் கம்பி (metal rod) ஒன்றால் மகனின் தலையில் தாக்கியதால், படுகாயமடைந்த அவர் திங்கட்கிழமை அன்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இறந்த ஹ்ரித்விக் வேலை இல்லாமல் இருந்தார் என்றும், தொடர்ந்து விலையுயர்ந்த பொருட்களை மட்டுமே கேட்டு பெற்றோரைத் தாக்கி வந்துள்ளார் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். மேலும், அவர் போதைப் பழக்கம் மற்றும் குழந்தைப் பருவ குறைபாடுகளால் அவதிப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
