மும்பையின் செம்பூரில் உள்ள காளி அம்மன் கோயில் ஒன்றில், காளி சிலையின் அலங்காரம் மேரி மாதா போல மாற்றப்பட்டிருந்தது. மஞ்சள் உடையில், குழந்தையைத் தாங்கியிருந்த அந்தத் தோற்றத்தைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குக் காரணம் கேட்டபோது, அர்ச்சகர் ரமேஷ், கனவில் காளி மாதா இப்படிச் செய்யச் சொன்னதாகக் கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by MUMBAI | Mumbai Lifestyle, Food & places (@mumbai7merijaan)

​இந்த அலங்காரத்தால், மத உணர்வுகள் புண்பட்டதாகப் பலரும் கோபமடைந்து புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அர்ச்சகர் ரமேஷைக் கைது செய்தனர். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலா என்று காவல் துறையினர் இப்போது விசாரித்து வருகின்றனர். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.