இப்போதெல்லாம் மலைகள் மற்றும் செங்குத்தான பாதைகளில் பைக் ரைடிங் செல்வது இளைஞர்களுக்கு ஒரு ஃபேஷனாகிவிட்டது. அவர்கள் அதை ஒரு சாகசப் பயணமாகவே பார்க்கிறார்கள். இதற்காகத் தனியாகத் திட்டமிட்டுப் புறப்படுகிறார்கள். ஆனால், சில சமயங்களில் இயற்கை ஒத்துழைக்காதபோது, அது விபத்துகளில் முடிய வாய்ப்புள்ளது. அப்படி நேபாளத்தில் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு சென்ற ஒரு வெளிநாட்டுப் பயணி விபத்துக்குள்ளான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த வெளிநாட்டுப் பயணி சேறும் சகதியுமான ஒரு குறுகிய மலைப்பாதையில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபோது வழுக்கி கீழே விழுந்தார். விபத்துக்குப் பிறகு அவர் ஸ்கூட்டரின் அருகே அமர்ந்திருந்தார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற இந்திய வ்ளாகரான அனிமேஷ் குமார், அவருக்கு உதவ முன்வந்தார். அவருடன் அங்கிருந்த மேலும் சிலரும் சேர்ந்து, சேற்றில் சிக்கியிருந்த ஸ்கூட்டரைத் தூக்கி நிறுத்தினர். இதனால், அந்த வெளிநாட்டுப் பயணி விபத்திலிருந்து மீண்டு, தனது பயணத்தைத் தொடர முடிந்தது.
View this post on Instagram
இந்த எதிர்பாராத உதவிக்குப் பிறகு, பாதுகாப்பாக ஸ்கூட்டரில் திரும்பிய அந்தப் பயணி, வ்ளாகர் அனிமேஷைப் பார்த்து, “நன்றி ரைஸ்… நீ ஒரு நல்ல மீட்பாளர்” என்று தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “நேபாளத்தில் எதிர்பாராத ஒரு உதவி” என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் 4.3 மில்லியன் பார்வைகளைக் கடந்து பரவி வருகிறது. இந்த மனிதாபிமான செயலுக்காக அனிமேஷ் குமாருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். “உண்மையான உதவியை பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது,” என்றும், “இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை இது நினைவூட்டுகிறது,” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
