தமிழகத்தில், ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Low-Pressure Area) உருவாகி வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களுக்கு இன்று ‘மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றத்தினால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.