தமிழ்நாடு முழுவதும் ‘SIR’  படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வரைதான் ‘SIR’ படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். அதற்குப் பிறகு கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால், வாக்காளர்கள் அனைவரும் இந்த ‘SIR’ படிவங்களை உடனடியாக நிரப்பித் தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.