உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு தனியார் பேருந்து, நேற்று (நவ. 23) பிற்பகல் 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள ‘மதர் டெய்ரி’ (Mother Dairy) ஆலையின் சுற்றுச் சுவர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலின் தீவிரம் காரணமாகச் சுவர் இடிந்து விழுந்ததுடன், ஆலைக்குள் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றும் சேதமடைந்தது. விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. ஆலையில் பணியில் இருந்த விர்ஜீத் மற்றும் ராம்லால் உட்படச் சில ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
यूपी –
जिला इटावा में प्राइवेट बस बेकाबू होकर मदर डेयरी की दीवार से टकराई। 2 सिक्योरिटी गार्ड और 33 यात्री घायल हुए।साइकिल वाला : ‘इसे कहते हैं मौत को छूकर टक से वापस आना’ pic.twitter.com/9BtBfymaYv
— Sachin Gupta (@SachinGuptaUP) November 24, 2025
“>
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த அனைவரையும் மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
