அமெரிக்காவில் மருத்துவப் பணியைத் தொடரத் திட்டமிட்டிருந்த ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் காகு ரோகிணி (38), தனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதைத்தொடர்ந்து, அவர் வேலைக்காகத் தங்கியிருந்த ஹைதராபாத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் திங்கட்கிழமை (நவ. 24) அன்று தெரிவித்தனர். அவரது உடல் பின்னர் குண்டூருக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் தற்கொலைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் அவரது மனநிலை குறித்து அறிவதற்காகக் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
