மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பஜோகி பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான ராம் தாஸ். இவரது பாட்டி பெயர் பஞ்புலா ராம்கிஷன், வயது 68. ராம் தாஸ் கடந்த சில ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி வீட்டில் இருந்த அவரது பாட்டி ராம்கிஷனை, மனநலம் பாதிக்கப்பட்ட ராம் தாஸ் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராம்கிஷனை அவரது குடும்பத்தினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாட்டி ராம்கிஷன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராம் தாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
