துபாய் விமானக் கண்காட்சியில் (ஏர் ஷோ) நவம்பர் 21 அன்று இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நமாம்ஸ் சியால் உயிரிழந்தார்.
விபத்து நடந்தும், விமானத்தை ராணுவமற்றப் பகுதியில் விழாமல் இருக்க முயற்சி செய்து, தன் உயிரைப் பற்றிச் சியால் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்த இறுதிச் சடங்கின்போது, நமாம்ஸ் சியாலின் மனைவியும், விமானப் படை அதிகாரியுமான விங் கமாண்டர் அஃப்சான், தனது கணவருக்குச் சல்யூட் அடித்து கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினார். சீருடையில் அவர் தனது கணவருக்கு அளித்த இந்த உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலி, ஒரு வீரனின் துணிச்சலையும், மனைவியின் தனிப்பட்ட இழப்பின் ஆழத்தையும் வெளிப்படுத்தியது.
#WATCH | Himachal Pradesh: Wing Commander Afshan salutes her husband, Wing Commander Namansh Syal, as she pays her last respects to him.
Wing Commander Namansh Syal lost his life in the LCA Tejas crash in Dubai on 21st November. pic.twitter.com/DPKwARut4r
— ANI (@ANI) November 23, 2025
“>
விங் கமாண்டர் நமாம்ஸ் சியால் மற்றும் அவரது மனைவி அஃப்சான் ஆகிய இருவரும் இந்திய விமானப் படையில் அதிகாரிகளாகப் பணியாற்றி வந்தனர். 16 ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இணைந்திருந்த இந்தத் தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார். துயரமான விபத்தில் உயிரிழந்த நமாம்ஸ் சியாலின் உடல், முதலில் காங்ரா விமான நிலையம் மற்றும் பின்னர் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமானப் படைத் தளத்துக்கு (LCA HAL Tejas-ஐ இயக்கும் தளம்) கொண்டு செல்லப்பட்டது.
விமானியின் தந்தை, மனைவி அஃப்சான் மற்றும் மகள் உட்படக் குடும்ப உறுப்பினர்கள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகித் தேசத்தை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.
