2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளிகளான பவாரியா கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகள் என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

கொலை, கொள்ளை மற்றும் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இவர்களுக்கான தண்டனை விபரம் குறித்த அறிவிப்பு வருகிற 24-ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே நடிகர் கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.