ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் பயன்படுத்தும் தந்திரமான வடிவமைப்பு முறைகளை (Dark Patterns) நீக்கிவிட்டதாக Zepto, Zomato, Swiggy, JioMart, Flipkart உள்ளிட்ட 26 முன்னணி நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளன.

டார்க் பேட்டர்ன் என்றால் என்ன?

  • நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, “இந்த ஆஃபர் இன்னும் 5 நிமிடங்களில் முடிந்துவிடும்” என்று தவறான அவசரத்தை உருவாக்குவது.

  • நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுடன், நீங்கள் அறியாமலேயே வேறு பொருளை கூடையில் சேர்ப்பது (Basket Stealing).

  • நீங்கள் ஒரு சேவைக்காக எளிதில் பதிவு செய்ய முடிவது, ஆனால் அதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கவைப்பது (Subscription Trap).

  • சந்தா கட்டணத்தை ரத்து செய்தால் உங்களை வருத்தப்பட வைப்பது (Confirm Shaming).

இந்த மாதிரியான 13 வகையான ஏமாற்று வேலைகள் இனி இருக்காது என்று இந்த 26 நிறுவனங்களும் உறுதி அளித்துள்ளன. இது, டிஜிட்டல் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு நேர்மையான வர்த்தகச் சூழலை உருவாக்குவதற்கான பெரிய வெற்றியாகும்.