சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 21) தொடர்ந்து சற்றுக் குறைந்துள்ளது. நேற்று (நவ. 20) ஒரு சவரன் ₹.92,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹.320 குறைந்து ₹.91,680-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ₹.11,500-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹.40 குறைந்து ₹.11,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹.4 குறைந்து ₹.169-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹.1,69,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
