கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று (நவ. 22) ஒரே நாளில் அதிக உயர்வைக் கண்டுள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ₹.170 உயர்ந்து ₹.11,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹.1,360 உயர்ந்து ₹.93,040-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹.3 உயர்ந்து ₹.173-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹.1,73,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
