கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அமீபா மூளைக்காய்ச்சல் (வேகமாகப் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேங்கிக் கிடக்கும் அசுத்தமான நீர் மூலமாக மூக்கு அல்லது வாய் வழியே இந்த அமீபா உடலுக்குள் புகுந்து மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாடு பகுதியைச் சேர்ந்த வினயா (26) என்பவர், கடந்த 40 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதன் மூலம், கேரளாவில் இந்த பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர் என்றும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
