பொதுவாக, மனிதர்களின் குரலை அப்படியே நக்கல் செய்யும் திறமை கொண்ட பறவைகளில் கிளிக்கு ஒரு தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு கிளியின் வினோத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பொது முடக்கத்தின் (Lockdown) போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், வண்ணமயமான ஒரு கிளி ஜன்னல் கண்ணாடியின் வெளியில் அமர்ந்திருக்கிறது.
Parrot calling mummy to enter house pic.twitter.com/gFhAetq9Ph
— news for you (@newsforyou36351) November 15, 2025
அந்தக் கிளி, தன் அலகால் ஜன்னலை மீண்டும் மீண்டும் தட்டி, அதேசமயம் “அம்மா! அம்மா!” என்று கொஞ்சுவது போலக் குரல் எழுப்புகிறது. இந்தக் கிளி, வெளியில் வைரஸ் பரவியிருப்பதையும், பொது முடக்கம் அமலில் இருப்பதையும் அறிந்தது போல, உள்ளே வர கெஞ்சுவது போல இருந்தது என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஒரு சின்னக் குழந்தை தன் தாயை அழைப்பதைப் போல இருந்த கிளியின் இந்தச் செயல், வீடியோவைப் பார்க்கும் அனைவரின் மனதையும் உருக்குவதாக உள்ளது. இந்த வீடியோவுக்குப் பலரும் ‘கியூட்’, ‘ஸ்வீட்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
