ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி (HOD), அங்குப் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை, இரண்டு நபர்களுக்கான முழுப் பணிச்சுமையையும் (Full Workload) அவர் கையாண்டபோதிலும், “சுகவாசக் காலத்தில் (Honeymoon Period) இருக்கிறார்” என்று விமர்சித்ததால், அந்த ஊழியர் தன் வேலையை விட்டு வெளியேறிய அதிர்ச்சிச் சம்பவம் குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளடக்க எழுத்தாளராக (Content Writer) வேலை பார்த்த அந்த ஊழியர், பணியில் சேர்ந்து வெறும் ஐந்து மாதங்களே ஆன நிலையில், நீண்ட நேரம் வேலை, கூடுதல் பொறுப்புகள் மற்றும் காலக்கெடுவைப் பூர்த்தி செய்யத் தேநீர் இடைவேளைகள், மதிய உணவு இடைவேளைகள் ஆகியவற்றையும் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் அவரது குழுவில் இருந்த ஒரே ஒரு சக ஊழியர் விலகிய பிறகு, முழுத் துறையின் பணிச்சுமையும் இந்த ஊழியர் மீது விழுந்தது. இதனால் வேலை தாமதமானது.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த HOD, “இந்த வேலைக்கு இரண்டு பேர் வேண்டுமா அல்லது நான்கு பேர் வேண்டுமா என்று நான் தான் முடிவு செய்வேன்” என்று திட்டியதோடு, மரியாதை இல்லாத ‘டூ-டாடாக்’ (Tu-tadaak) தொனியில் பேசியது தான் மிகவும் வருத்தம் அளிப்பதாக அந்த ஊழியர் கூறியுள்ளார்.

தன் ராஜிநாமா மின்னஞ்சலுக்கு “என் சுகவாசக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்” என்று தலைப்பிட்ட அவர், தனது கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாததைக் குறிப்பிட்டு, வேலையை விட்டு விலகியுள்ளார்.