வெளிநாடுகளில் சில சந்தைகளில் கோழி, மீன்களைத் தாண்டி தவளைகள் மற்றும் பாம்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் அதிசயமான சந்தையின் AI காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், மேசையின் மீது வாழை இலைகளைப் பரப்பி, அதன் மேல் ஆமைகள், தவளைகள், மற்றும் பாம்புகள் ஊர்ந்து செல்வதாகவும், பெண்கள் அதைப் பயமின்றிப் பார்ப்பதாகவும் காட்சிகள் உள்ளன.

இது நிஜமல்ல, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளி என்று அறியப்பட்டாலும், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்தக் காணொளியை X (ட்விட்டர்) தளத்தில் @AamirMalick605 என்ற பயனர், “பாம்புகளின் சந்தை வந்துவிட்டது, தைரியம் இருந்தால் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

வெறும் 8 வினாடிகள் ஓடும் இந்தக் காணொளி ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “எனக்குப் பயமா இருக்கு, எனக்கு எதுவும் வேணாம்” என்றும், “இது தைரியசாலிகளின் சந்தை” என்றும் பலர் இதற்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.